தர்மீக ஆசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் மண்டியிட்டு வஜ்ராசனத்தில் உட்காரவும்.
பின்னர் மெதுவாக மூச்சை வெளியில் விட்டவாறு முன்புறமாகக் குனிந்து தலையை தரையின் மீது வைக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் பின்புறம் கொண்டு சென்று பாதங்களை பிடித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வந்த ஆசனங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் தான் இதற்கும்.
இந்த ஆசனத்தில் மூன்று முறைகள் இருக்கவும். மூன்று தடவைகள் செய்யலாம்.
இந்த ஆசனங்களை மிக எளிதில் செய்து வரலாம். இல்லறத்தில் ஈடுபடுபவர்களுக்கு பிரம்மச்சரியத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பான மனப்பக்குவத்தையும், ஆற்றலையும் தர வல்லது.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
தர்மீக ஆசனம் பயன்கள்
1) இரத்த ஓட்டம், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
2) பாரிச வாயுக்காரர்களுக்கு இது அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.
3) உடலை மிகச் சுறுசுறுப்பான நிலையில் இருக்க வைப்பதற்கு இந்த ஆசனம் அற்புத பலன் அளிக்கிறது.
4) முழங்கால், கணுக்கால் பிடிப்பு உள்ளவர்கள் மண்டியிட்டு செய்து வந்தால் பிடிப்பு நீங்கி விடும்.
5) முழங்காலிலோ, பாதங்களிலோ வீக்கம் ஏற்பட்டாலும் மறைந்து விடும்.
6) நீர்த்துப் போன வீரியத்தை இந்த ஆசனம் கெட்டிப்படுத்துகிறது.
7)
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா