உத்தித பத்மாசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் இரண்டு கைகளையும் புமியில் ஊன்றி பத்மாசனம் களைந்து விடாமல் உடலை மெதுவாக தூக்க வேண்டும்.
உடலை ஆட விடாமலும், நடுக்கம் இல்லாமலும் உயர்த்தி இருக்க வேண்டும். இதை மூன்று முறை செய்தால் பொதுமானது.
பார்வை நேராக இருத்தல் வேண்டும்.
இந்த ஆசனம் செய்வதால் கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் தேவையில்லை. இரண்டு கைகளையும் தரையில் அழுத்தமாக ஊன்றிக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
உத்தித பத்மாசனம் பயன்கள்
1) சுவாசத்தை மெதுவாக நிறுத்தி விடுவதால் இதய கோளாறுகள்
நீங்கி நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெரும்.
2) தொந்தி கரையும், மலசிக்கல் தீரும்
3) நீரழிவு நோய் நீக்கவும், வராமல் காப்பதற்கும் இந்த ஆசனம்
சிறந்தது.
3) பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலியை நீக்கும்.
4) மார்பகம் நல்ல முறையில் விரிந்து கொடுத்து, அகன்ற திரண்ட
மார்பைப் பெறலாம்
5) நெஞ்சு நன்கு உறுதியாகும்.
6) பெண்களுக்கு இந்த ஆசனம் மிகச் சிறந்ததாகும்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா