சலபாசனம்
சலபாசனம் செய்முறை
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் குப்புறப்படுத்து வாய், மூக்கு, முகம் மேட்டினை தொட்டவாறு இருத்தல் வேண்டும்.
கால்களை இடுப்பிற்கு மேல் உயர்த்துதல் வேண்டும்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி செய்து பின் உயரத் தூக்கவும்.ஆசனம் செய்து முடித்த பின்னர் கால்களை தொப்பென போடுதல் தவறானது.
முரட்டுத்தனமாய் இல்லாமல் மெதுவாக 10 வினாடிகள் செய்யலாம். 10 வினாடிகள் செய்த பின்னர் போதுமானவரை இளைப்பாற ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
வயிற்றின் கீழ்பகுதி, தொடை மற்றும் கால்களுக்கு வளவு தருகிறது.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
சலபாசனம் பயன்கள்
1) வயிற்றுத் தசைகள் அனைத்தும் பலப்படும்.
2) பெருங்குடல், சிறுகுடல்,ஈரல்,கணையம்\போன்ற உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.
3) இரத்த ஓட்டம், குத்தல், குடைச்சல் முற்றிலும் குணம் அடையும்.
4) வயிற்றுவலி, இடுப்புவலி, முதுகெலும்பு இவைகள் குணமடையும்.
5) குடலில் ஜீரணம் ஆகாதவைகளை மலத்துவாரத்திற்கு கொண்டு வந்து சரி செய்யும்.
6) வயிறு, இடுப்பு கால்களை வலுப்தடுத்துகிறது.
7) இரத்த ஓட்டம் நன்றாக ஏற்படுகிறது.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா