உட்கட்டாசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் நின்று கால்களை அகலமாக வைத்து கொண்டு, பாதி அளவு உட்காந்த நிலையில் கைகள் இரண்டையும் நேராக நீட்ட வேண்டும். கால் மூட்டில் இலேசாக வலிகள் ஏற்பட்டால் தரையில் உட்காந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆசனம் செய்யும்பொழுது நன்றாக சுவாசத்தை உள்ளே இழுக்கப்பெற்று பின்னர் சுவாசக் காற்றினை வெளியே விடுதல் வேண்டும்.
இந்த ஆசனத்தை மூன்று தடவை செய்யவும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
உட்கட்டாசனம் பயன்கள்
1) இந்த ஆசனத்தை செய்து வருவதால் உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்தும் விலகும்.
2) மட்ட ஆசனங்களை செய்வதற்கு இவ்வாசனம் முதல் கருவி என்று கூறலாம்.
3) கால் மூட்டில் நீர் தேங்குதல், மார்பில் காணும் நோய்கள் நீங்கும்.
4) உடம்பில் வலி, உளைச்சல்,வாதம்,யானைக்கால் வியாதி விலகும்.
5) 4 மைல்கல் நடந்து வரக்கூடிய பலன்கள் கிடைக்கும்.
6) ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஆகிய அனைவரும் செய்யக்கூடிய எளிய சனத் பயிற்சி ஆகும்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா