பத்த பத்மாசனம்
பத்த பத்மாசனம் செய்முறை
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் உற்காந்து பத்மாசன நிலைக்கு கால்களை கொண்டுவரவும்.
வலது கையினால் பின்னல் வளைந்து கொண்டு, வலது கால் விரலை தொட வேண்டும்.இடது கை பின் பக்கமாக வளைத்து இடதுகால் கட்டைவிரலை தொட வேண்டும்.
இரண்டு முழங்கால்களும் தரையில் படும்படி அமர வேண்டும்.
பிறகு இதே நிலையில் முதுகெலும்பு நேராக அமரும்படி உக்காரவும்.
மூச்சினை நன்கு இழித்து விட வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
அதன்பின் கால்களை மாற்றிப்போட்டு திரும்ப பயிற்சி செய்ய வேண்டும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
பத்த பத்மாசனம் பயன்கள்
1) இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முழங்கால் வலிமற்றும், குதிகால் நரம்புகள் சரியாகும்.
2) மூட்டு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி சரியாகும்.
3) மூச்சு பிடிப்பு, வாதநோய்,சுவாசக்கோளாறுகள் தீரும்.
4) மலச்சிக்கல் தீரும், ஜீரணசக்தி அதிகரித்து சுறுசுறுப்பை உண்டாகும்.
5) உடம்பில் உள்ள வலிகள் குணமாகும்.
6) இந்த ஆசனத்தை செய்து வந்தால் இரண்டு கணுக்கள் நரம்புகளும் உறுதி பெறுகின்றன.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா