அர்த்த ஹாலாசனம் செய்முறை மற்றும் பயன்கள்


அர்த்த ஹாலாசனம்



அர்த்த ஹாலாசனம் செய்முறை 

முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் மல்லாந்து படுத்துக்கொண்ட பின் இரண்டு கைகளையும் மடக்கி தலைக்கு கீழே வைத்துக்கொண்டு, பின் இரண்டு கால்களையும் மெதுவாக தூக்கி முகத்திற்கு நேராக கொண்டுவந்து,கால்களை வளைக்காமல் தலைக்கு நேராக எடுத்துச் செல்ல வேண்டும். 

கட்டை விரல்கள் மட்டும் தரையை தொடுதல் வேண்டும்.

கால்களை உயர்த்தும்போது மூச்சினை உள்ளே இழுத்தாள் வேண்டும்.

இதுபோன்ற பல தடைகள் செய்து வந்தால் பழைய நிலைக்கு வர ஏதுவாக இருக்கும்.

இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.


பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும். 



அர்த்த ஹாலாசனம் பயன்கள் 

1)  இந்த ஆசனத்தை செய்து வருவதால் வெளியில் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் குணமடையும்.
 
2) உடல் உறுப்புக்கள் அனைத்தும் நல்ல பலன்களை அடைய முடியும்.

3) திசுக்கள் மிக வலிமையடையும்.

4) நீண்ட நாட்கள் மலச்சிக்கல் இருப்பினும் வயிற்றில் வாய்வுத் தொல்லைகள் இருப்பினும் அவற்றை இந்த ஆசனம் அடியோடு குணப்படுத்தும்.

5) ஈரலில் நோய் வருவதை தடுக்கும்.


முக்கிய குறிப்பு :

        1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல் 
             செய்ய வேண்டாம்.

        2. யோகா ஆசனங்களை முறையாக யோகா  
            ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
                   
        3. கர்ப்பிணி  பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்    
            உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய  
            வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின் 
            உதவியுடன் செய்யவும். 

Post a Comment

Previous Post Next Post