யோகா முத்ரா ஆசனம் செய்முறை மற்றும் பயன்கள்

யோகா முத்ரா ஆசனம்






யோகா முத்ரா ஆசனம் செய்முறை 

முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் மண்டியிட்டு உட்காரவும். 

முதலில் பத்மாசனத்தைப் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டு வந்து வலது மணிக்கட்டை  இடது கையினால் லேசாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக முன்பக்கமாகக் குனிய வேண்டும். 

குனிந்து தரையை நெற்றி தொடும் அளவிற்கு இடுப்பை முன்னோக்கி வளைக்க வேண்டும். இப்படி குனியும்பொது மூச்சை வெளியே விட வேண்டும். நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.

இந்த ஆசனம் முடிந்தவுடன் நேராக நிமிர்ந்து உட்காந்து மூன்று அல்லது நான்கு முறை ஆழ்ந்த சுவாசம் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.

பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும். 



யோகா முத்ரா ஆசனம் பயன்கள் 

1) முதுகெலும்பு நேராகும். 
 
2) நுரையீரலிலுள்ள நோய்க்கிருமிகள் நாசமாகும்.

3) முக்கியமாக மலச்சிக்கல் நீங்கும்.

4) யோக முத்ராசனத்தை மேற்கொள்ளும்பொது வயிறு நன்கு மடிக்கப்பட்டு குடல்கள் நன்கு அழுத்தப்படுகிறது.

5) இதனால் குடல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து குடல் பகுதிகள் நன்கு இயங்கப்படுகிறது.

6) சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல், பித்தப்பை கோளாறுகள் நீங்கும். 

7) இடுப்பு சிரிது வயிறு ஒடுங்கி அழகான வடிவமைப்பு பெறுகிறது.

முக்கிய குறிப்பு :

        1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல் 
             செய்ய வேண்டாம்.

        2. யோகா ஆசனங்களை முறையாக யோகா  
            ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
                   
        3. கர்ப்பிணி  பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்    
            உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய  
            வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின் 
            உதவியுடன் செய்யவும். 

Post a Comment

Previous Post Next Post