புஜங்காசனம்
புஜங்காசனம் செய்முறை
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் மண்டியிட்டு உட்காரவும்.
விரிப்பின் மேல் குப்புறப் படுத்துக்க கொண்டு இரண்டு குதி கால்களையும் ஒன்று போல் சேர்த்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை மார்புக்கு நேராக விரிப்பில் ஊன்றிக்கொண்டு முகவாய்க் கட்டையையும் விரிப்பின் மேல் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சுவாசத்தை மெதுவாய் விடடுக் கொண்டே கைகளை ஊன்றியவாறு தலையைத்தூக்கி பின்னுக்கு வளைக்கவும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
புஜங்காசனம் பயன்கள்
1) இப்பயிற்சியானது உடலைத் தாக்கி நிற்கும் முக்கிய உறுப்பான முதுகெலும்புக்குச் சிறந்த பயிற்சியாக அமைகிறது.
2) வயிற்று மார்புச் சதைகள் தளர்த்தி நீட்டப்பட்டு மேல் முதுகு கழுத்திச் சதைகள் மடக்கி இழுக்கப்பட்டு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.
3) அதனால் முதுகு நரம்புகளும் அதைச் சேர்ந்த சதக் கோளங்களும் வீரிய பலம் பெறுகின்றன.
4) கழுத்துக்கு நல்ல பயிற்சி கிடைப்பதால் சுளுக்கு ஏற்படாது.
5) கைகளுக்கு நல்ல வழியை கிடைக்கின்றது.
6) கூன் முதுகு நிமிர்ந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா