நாபி பீடாசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
இரு கைகளால் பாதங்களை பிடித்து வயிற்றின் மீது கால்களை மடக்கி இருத்தல் வேண்டும். இரு பாதங்களும் தொப்புள் பகுதியின் மீது பதிந்து இருத்தல் வேண்டும்.
பின்பாகம் மட்டும் புமியில் உட்காந்திருக்கும் இவ்வாசனத்தில் கால்கள்நன்கு அகலமாக விரிய வேண்டும்.
கால்களை உயர்த்தும்போது மல்லாந்து விழுந்து விடாமல் இருத்தல் வேண்டும்.
இடுப்பிலிருந்து கைகளை அகற்றுதல் கூடாது. இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு காலை மாலை மூன்று தடவை செய்யவும்.
இந்த ஆசனத்தை மாணவ, மாணவிகள் எளிதில் பழகலாம்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
நாபி பீடாசனம் பயன்கள்
1) இடுப்பு வலி, ஜீரணமின்மை, பசி ஏற்படாமை இவைகளை சரி செய்யும்.
2) வலிப்பு நோய், குஷ்டம் முதலியவற்றைப் போக்குவதற்கு இவ்வாசனம் உதவுகிறது.
3) கெண்டைக்கால் தசைப் பகுதிகள் வலிமை பெறுகின்றன.
4) தொடைகள், அழுத்தமாகவும், உறுதியாகவும் இருக்க உதவுகிறது.
5) மற்ற ஆசனங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களை பெறலாம்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா