தவளை ஆசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் இரண்டு கால்களையும், புட்ட (பிருஷ்ட)த்தின் அடியில் மடக்கி உட்கார வேண்டும். முடிந்த அளவு இரண்டு முழங்காலுக்கு இடையில் உள்ளதை (தொலைவு) அதிகப்படுத்தி, பின் பாகங்களுக்கிடையில் பாதங்கள் இரண்டு பக்கமும் இணைந்தபடி இருக்கும்.
இரு கைகளையும் முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆசனம் தவளை வடிவம் கொண்டிருப்பதால் தவளை ஆசனம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனத்தை மூன்று நிமிஷங்கள் மூன்று தடவை செய்யவும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
தவளை ஆசனம் பயன்கள்
1) கை, கால்களுக்கு முறுக்கு ஏற்படுகிறது.
2) இரத்த ஓட்டம் ஏற்படும்.
3) நரம்புகளுக்கும் தசைகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
4) அபாரமான ஜீரண சக்தியைத் தருகின்றன.
5) வயிற்றில் உள்ள நோய்களை நீக்குகின்றது.
6) கைகளுக்கும், கால்களுக்கும் புட்ட ( பிருஷ்ட) பகுதிகளுக்கும் உறுதியான உரமளிக்கிறது.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா