உட்டியானா ஆசனம்
உட்டியானா ஆசனம் செய்முறை
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் கால்களை ஓரடி அகற்றி நின்று முதுகிணை முன்பக்கமாக வளைத்து வாந்தி எடுப்பது போல் உடலை முன் வளைத்து இரண்டு கைகையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளவும்.
மூச்சினை வெளியேற்றி வயிற்றினை எக்கி கைகளால் தொடையை அழுத்தி குடலை ஏற்றவும்.
இவ்வாசனத்தை படிப்படியாக 15 வினாடி நிறுத்தி பழகலாம். காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
மற்ற ஆசனங்கள் செய்வதைப் போன்று மூன்று முதல் ஐந்து முறை இதைச் செய்யலாம்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
உட்டியானா ஆசனம் பயன்கள்
1) வயிற்றுப் பகுதியின் உள்ளே இருக்கும் உறுப்புகள் வீரியம் பெரும்.
2) ஜீரண சக்தி அதிகமாகும்.
3) இளமை தாண்டவமாடும்.
4) குடல்புண், வயிற்றுவலி, தொந்தி, ஊளைச் சதை கரையும்.
5) தொடர்ந்து நாள் விடாமல் செய்பவர்களுக்கு மூலம், பவுத்திரம், ஹெர்னியா போன்ற வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் வரவே வரத்து.
6)
7)
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா