பர்வதா ஆசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் உட்கார வேண்டும்.
முன்பக்கத்தில் மர ஸ்டூலை வைக்கவும். மெதுவாக முன்னால் அருகில் உள்ள ஸ்டூலை பிடித்துக்கொண்டு பத்மாசனம் கலையாமல் முழங்கால் மூட்டு ஆதாரத்தில் நிற்க வேண்டும்.
மெதுவாக இரண்டு கைகையும் உயரத் தூக்க வேண்டும். இப்போது கால்களின் மூட்டு ஆதாரத்தில் நிறைவும்.
முழங்கால்களின் மூட்டுக்களின் உதவியுடன் நிற்க வேண்டும். நாட்கள் போகப் போகப் பயிற்சி எடுத்தால் செய்ய முடியும்.
மூன்று வினாடிகள் நிற்கவும். மூன்று தடவை செய்தலே போதுமானது.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
பர்வதா ஆசனம் பயன்கள்
1) சுவாசபைக்கு அதிகமான காற்று வருவதால் மார்பில் உள்ள சளி நீங்கும்.
2) இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
3) நரம்பு பிடிப்பு நோய்கள் நீங்கும்.
4) கால்களில் வலிமைசேரும்.
5) நரம்பு மண்டலமும் நன்கு செயல்பட உதவும்.
6) ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் ஆசனத்தை செய்யலாம்.
7) இந்த ஆசனம் ஒரு அற்புதமானதாகும்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா