நெளலி ஆசனம்
நெளலி ஆசனம் செய்முறை
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் உட்டியான நிலைக்கு வந்து முன் வயிற்றின் சதைகளை இறுக காட்டிச் செய்யவும்.
இவ்வாறு இறுக்கியவுடன் மேலே சென்ற வயிறு தானாக முன்னால் துரத்திய நிலையில் வயிறு தடிமனாக முன் வந்து நிற்கும்.சில வினாடிகள் நின்று சதையை நழுவவிட்டு சுவாசத்தை உள்ளிழுத்து நிமிர்ந்து இளைப்பாற்றி கொள்ளலாம்.
தொடைகளை அதிகமாக கையினால் அழுத்திக் குடலை வலது பக்கம் இடது பக்கம் தள்ளலாம்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
நெளலி ஆசனம் பயன்கள்
1) இழந்த ஆண்மையை மீண்டும் பெறமுடியும்.
2) விந்து ஒழுகுவதைத் தடுக்கும். விந்து கடடியாகும்.
3) வயிற்றில் உள்ள கிருமிகளும்,பூச்சிகளும் ஒளியும். குடலில் அமிலங்கள் உண்டாகாது.
4) குடல் புண் குணமடையும். உடலில் தேஜஸ் உண்டாகி புத்துணர்ச்சி ஏற்படும்.
5) விந்து நோய், வெள்ளை, வேட்டை நீங்கி இளமை கொடுக்கும்.
6) உடல் புத்துணர்ச்சி பெரும்.
7) உட்டியான ஆசனப் பயிற்சிக்கு கிடைக்கக்கூடிய அற்புதமான பலன்களே நநெளலிக்கும் கிடைக்க வல்லது ஆகும்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா