வஜ்ராசனம்
வஜ்ராசனம் செய்வது எப்படி
முதலில் தரை விரிப்பில் மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்.
உங்க முழங்கால்களுக்கு இடையில் நான்கு விரல்கள் இடைவெளி விட்டு உங்கள் குதிகால்களில் பிட்டத்தை வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்.
இடது காலின் கட்டைவிரலின் வலது காலின் கட்டைவிரல் இருக்குமாறு அமர்ந்துகொள்ளவும் .
உங்க முதுகை நேராக வைத்து உங்க பார்வையை நேராக பாருங்கள். உங்க கைகளை உங்க முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள்.தலை நேராக இருக்க வேண்டும்.
உங்க கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
வஜ்ராசனத்தின் பயன்கள்
1. முதுகின் கீழ் பகுதி வலியை போக்குகிறது
2. வாதத்தினால் வரும் வலியை நீக்க உதவுகிறது
3. இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலிமைப்படுத்த உதவுகிறது
4. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
5. நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது
6. உடல் பருமனை குறைக்க உதவுகிறது
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா