உஸ்ட்ராசனம் செய்முறை மற்றும் பயன்கள்

 உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் செய்முறை

தரைவிரிப்பில் முட்டிபோட்டு, கைகள் இரண்டையும் மேலே தூக்கி,  பின் வயிறு, மார்பு, தலை ஆகியவைகளை பின்புறம்  மெதுவாக வளைத்து இரு கைகளாலும் இரு கணுக்கால்களையும் பிடிக்க வேண்டும். இதுவே உஸ்ட்ராசனம் ஆகும். 

இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.

பின்பு   ஒரு  ஒரு கைகளாக மேலே உயர்த்தி   இயல்பு நிலைக்குத் திரும்பவும்

பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.

உஸ்ட்ராசனம் பலன்கள்

1. முதுகெலும்பை வலிமையாக்கும் 

2. மார்பு பகுதியை விரிவடையும்

3. தொந்தியை  குறைக்கும் 

4.கால்கள், கைகள், புஜங்கள் உறுதியாகும் 

5. முதுகுவலி, இடுப்பு வலி அனைத்தும் குறையும் 

6. எவ்வித நோயும் உடலை அண்டாது.

முக்கிய குறிப்பு :

        1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல் 
             செய்ய வேண்டாம்.

        2. யோகா ஆசனங்களை முறையாக யோகா  
            ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
                   
        3. கர்ப்பிணி  பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்    
            உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய  
            வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின் 
             உதவியுடன் செய்யவும்.




Post a Comment

Previous Post Next Post