சிரசாசனம் செய்முறை மற்றும் பயன்கள்


 சிரசாசனம்

                                                                               


சிரசாசனம் செய்முறை

முதலில் யோகா மேட்டின்  மீது முட்டிபோட்டு   உட்காரவும்.

 அடுத்து முன்பக்கமாக குனிந்து தலையை யோகா மேட்டின் மீது வைக்கவும்.

அடுத்து கால்களை மெதுவாக மேலே உயர்த்தவும், கால்கள் செங்குத்தாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.


பிறகு  மெதுவாக காலை மடக்கி கீழே கொண்டுவரவும்

பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்

புதிதாக இந்த ஆசனத்தை செய்பவர்கள் சுவற்றின் ஓரம் தலையணையை வைத்து முயற்சி செய்யவும்.

 

சிரசானத்தின் பலன்கள்

1) இரத்த ஒட்டத்தை சீராக்கும்.

2) முக அழகை அதிகரிக்க செய்யும்.

3) கண்களில் ஏற்படும்  நோய்களைத் குறைக்கு.

4)  மூளை, கண், காது, மூக்கு, வாய் போன்ற மிக முக்கியமான 

      உறுப்புகளுக்கு தேவையான சக்திகளை அளிக்கிறது.


5) மூக்கில் வாசனை சக்தியை அதிகரிக்கிறது .

6) தொடர்ந்து செய்து வரும்போது நிம்மதியான தூக்கம் வரும்.

7) உடம்பில் உள்ள  இரத்தம் அனைத்தும் சுத்தமடைகிறது.

முக்கிய குறிப்பு :

        1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல் 
             செய்ய வேண்டாம்.

        2. யோகா ஆசனங்களை முறையாக யோகா  
            ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
                   
        3. கர்ப்பிணி  பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்    
            உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய  
            வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின் 
            உதவியுடன் செய்யவும்.
 

 

Post a Comment

Previous Post Next Post