பத்மாசனம்
பத்மாசனம் செய்யும் முறை
சமதளத் தரையில் போர்வை அல்லது யோகா மேட்டை விரித்துக்கொள்ளவும். போர்வையில் அமர்ந்து கொண்டு வலது பாதத்தை இடது தொடையின் மேலும் இடதுபாதத்தை வலது தொடையின் மேலும் பொருந்தும்படியாக அமர்ந்துக்கொள்ளவும்.
கால்கள் இரண்டும் அடிவயிற்றில் படும்படி இருக்க வேண்டும். உங்களுடைய முழங்கால்கள் தரையில் படும்படி நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும்.
பத்மாசனத்தில் இருக்கும்போது கையின் ஆள்காட்டிவிரலின் நுனி கட்டை விரலின் நுனியைத் தொடுமாறு இருக்க வேண்டும். நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தவே இந்த சின்முத்திரை. பத்மாசனத்தில் அமர்ந்த பிறகு கண்களை மூடி உங்கள் இஷ்டதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
பத்மாசனம் செய்வதன் பயன்கள்
1. பத்மாசனம் செய்வது இடுப்பிற்கு ரொம்ப நல்லது.
2. இது உங்களுடைய இடுப்பு மற்றும் கால்களில் இரத்த
ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது.
3. இடுப்பு வலி இருப்பவர்கள் தொடர்ந்து பத்மாசனம் செய்து
வந்தால் விரைவில் குணமாகும்.
4. மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பவர்கள் பத்மாசனத்தை
தொடர்ந்து செய்து மனஅழுத்தம் குறையும்.
5. உங்களுடைய உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராகும்.
6. உங்களின் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமான
பிரச்சனை முற்றிலும் சரியாகும்.