சர்வாங்காசனம் செய்முறை மற்றும் பயன்கள்

 சர்வாங்காசனம்


சர்வாங்காசனம் செய்முறை 

முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் நேராக படுத்துக்கொள்ளவும்.

பிறகு இரண்டு காலையும் மெதுவாக மேலே தூக்கி படத்தில் காட்டியவாறு இரு கைகளால் முதுகை பிடித்து கால்களை  நேராக நிறுத்தவும்.

இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.

அடுத்து  கால்களை மடக்கி மெதுவாக கீழே கொண்டுவரவும்.

பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும். 



சர்வாங்காசனம் பயன்கள் 

1)  மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம்,இரத்த ஓட்ட மண்டலம், உடல் கழிவை வெளியேற்றும் மண்டலம் போன்ற மண்டலங்கள்  சிறப்பாக செயல்பட உதவுகிறது.
 
2) கிட்னி கோளாறுகளை சரி செய்கிறது 

3) இரத்தத்தை நன்றாக சுத்தம் செய்கிறது. 

4) தோல் வியாதிகள் குணமாக்குகிறது 

5) நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது 

6) இளமையுடன் இருக்க உதவுகிறது 

7) உடல் வளர்ச்சி அடைகிறது. 

8) இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது 

9) நரம்புகளுக்கு  புத்துணர்ச்சி அளிக்கிறது 

10) உடலை  சதை போடாமல் காக்கிறது.

முக்கிய குறிப்பு :

        1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல் 
             செய்ய வேண்டாம்.

        2. யோகா ஆசனங்களை முறையாக யோகா  
            ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
                   
        3. கர்ப்பிணி  பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்    
            உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய  
            வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின் 
            உதவியுடன் செய்யவும்.




Post a Comment

Previous Post Next Post